Thursday, March 2, 2017

2. கொடுமுடி பசுமடம் - உருவாக்கம்


சிவமயம் 


கொடுமுடி பசுமடம் – இடஅமைப்பு மற்றும் முக்கியத்துவம்



1.     காவிரி கரை அருகிலே எங்கள் பசுமடம் இருப்பதால்     பசுவிற்கு தண்ணீர் ப்ரச்சனை ஏதும் வராது.

2. இந்த பசுமடம் சுமார் 1.25 ஏக்கர் நிலத்தில் எங்ககளுடைய சொந்த இடத்திலுள்ளது. மேலும், கோவிலுக்கு மிக அருகாமையில் உள்ளதென்பது சிறப்பம்சம்.

3.  பசுமடம் இருக்குமிடம் குருமுஹுர்த்தமாகும். (முன்னால் தொண்டைமண்டல குல குரு ஜீவசமாதியிருக்குமிடத்தில் சிவலிங்கம் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வருகிறது).

4. காலங்காலமாக திருமுறைகள், திருவாசகம் போன்ற திருமந்திரங்களை மகுடீஸ்வரர் கோயிலில் ஓதுவதையும், எங்களுடய தனிப்பட்ட கோயிலான தெற்கு வீதியிலுள்ள ‘மலையம்மன் கோயிலில்’ பூஜை செய்வதையும் தர்மமாக செய்து வாழ்கிறோம். எங்கள் அடுத்த தலைமுறையும் இந்த தர்மத்தில் தங்ககளை முழுவதுமாக ஈடுபடுத்தி வருகின்றனர்.

5. பசுவின் சானத்தை வைத்து சுத்தமான முறைப்படி திருநீரு செய்து பக்தர்களுக்கு கொடுக்கவுள்ளோம்.

6. பெரும்பாலும் மகுடீஸ்வரர் கோயிலுக்கு தானம் செய்யப்படும் பெரும்பாலான நாட்டுபசுக்கள் ஏலத்தில் விடப்படுகின்றன. அதனை, இங்கு கொண்டுவந்து பசுமடத்தில் வளர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

7. பசுமடத்தில் இருக்கும் பசுவின்மூலம் கிடைக்கும் பசும்பாலினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய செய்ய விழைகிறோம்.

8. சுருக்கமாக எங்களின் நோக்கமானது, பாரம்பரியமாக நாங்கள் செய்துவரும் தர்மத்தையும் இடைவிடாது செவ்வனே செய்யவும், நாட்டு பசுக்களை காப்பாற்றவும், பசுக்களின் மான்மியத்தை பக்தர்களுக்கு சொல்லுவதேயாகும்.

9. இந்த பசுமடம் உருவாக பல நல்ல உள்ளங்கள் முன்னின்று தர்மகாரியம் செய்கின்றனர்.

10.இந்த பசுமடத்தை இன்னும் பெரிது படுத்தி முண்ணுதாரனமாக கொண்டுவர, இன்னும் பல நல்லுங்களின் பேராதரவு தேவைப்படுகிறது.

11.எல்லாம் வல்ல ஸ்ரீ மகுடீஶ்வரர் அருளாளும், ஸ்ரீ மலையம்மனின் அருளாளும் இந்த பசுமடம் விருத்தி அடையும் என்று ப்ரார்திப்போமாக!



 


 கிணறு உருவாக்கம்




பசுமடசாலை/அறை உருவாக்கம்


ஆதீன குருபூஜை


அடியார்களின் பசுதானம்



   வரவு செலவு கணக்கு










குறிப்பு : புன்னிய ஸ்தலமாகிய கொடுமுடியில் வாழும் பாரம்பரிய ஓதுவார்கள் குடும்பத்தினராகிய எங்களுக்கு சொந்தமான, மகுடீஸ்வரர் கோயிலுக்கு மிக அருகாமையில் (சுமார் 200 அடி தொலைவில்) உள்ள நிலத்தில் நாட்டு பசுக்களை வளர்த்து வருகிறோம்.
தெய்வ ரூபமான நாட்டு பசுக்களின் மகத்துவமறிந்து,விஶேச நாட்களில் பசுவிற்கு பூஜையும் செய்து, பசுவின் மான்மியத்தை மக்களுக்கு உணர்த்தவே இந்த பசு மடம் செயல்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


No comments:

Post a Comment